முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோருவது ஜனதா தள கூட்டணி வடிக்கும் முதலைக் கண்ணீர் - நடிகர் சத்ருகன் சின்ஹா தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஐக்கிய ஜனதா தளம் கோருவதும், பா.ஜ.க, லோக் ஜனசக்தி கட்சி அதை வழிமொழிவதும், மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அவை வடிக்கும் முதலைக் கண்ணீர் என்று பா.ஜ.க அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா எம்.பி. கூறியுள்ளார்.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், 15-வது நிதிக் குழுவிடம் அந்தக் கோரிக்கை முன் வைக்கப்படும் என்றும் மாநில முதல்வர் நிதீஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க. தலைவரும், துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா அதுதொடர்பாக சுட்டுரைப் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைவரும் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். பீகாரில் தற்போது அதிகாரத்தில் இருக்கும் கூட்டணி அரசு, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோருகிறது. அதையும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடமே வெளிப்படையாகக் கோருகிறது. இது, வாக்குகளை கைப்பற்றுவதற்கான வெறும் பிரச்சாரம் மட்டும் அல்ல. அதிகாரத்தில் தொடரும் பேராசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அடிமட்டம் வரை செல்லும் முயற்சியாகும். உண்மையில், அரசுக்கான பிரசாரம் என்பது அதன் செயல்பாடே ஆகும். ஆனால், மாநிலத்தில் வளர்ச்சி என்பது வெறும் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நண்பர்கள் இப்போதாவது செயல்படத் தொடங்க வேண்டும். இல்லையேல், தேஜஸ்வி யாதவுக்கு சாதகமாக சூழல் மாறிவிடும் என்று சத்ருகன் சின்ஹா அந்தப் பதிவுகளில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து