முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயவு செய்து மைதானத்துக்கு வந்து கால்பந்து போட்டியை பாருங்கள் - இந்திய அணி கேப்டன் சுனில் உருக்கமான அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : தயவு செய்து மைதானத்துக்கு நேரில் வந்து கால்பந்து போட்டியைப் பாருங்கள். ஆதரவு தாருங்கள், இன்று இல்லாவிட்டாலும்கூட என்றாவது ஒருநாள் உங்களுக்குப் பிடித்தார்போல் இந்திய கால்பந்து மாறும் என்று கால்பந்துப் போட்டிக்கு ரசிகர்களிடம் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆதரவு கோரியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும், மோகமும், மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை என்பது நிதர்சனம். கிரிக்கெட் வீரர்களைப் போல் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரம் மூலம் வருமானமும், ஊதியமும் தரப்படுவதும் இல்லை. இதனால், முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் கூட மற்ற விளையாட்டு வீரர்கள் பதக்கத்தையும், பரிசுகளையும் வென்று வந்தால்கூட நம் ரசிகர்கள் அவர்களை வரவேற்பதில்லை, பாராட்டுவதில்லை. இந்த நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

மும்பையில் இன்டர்கான்டினென்டல் கால்பந்துப் போட்டி நடந்தது. இதில் சீன தைப்பே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இது இந்திய கால்பந்து ரசிகர்களின் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நம்பிக்கை அளவையும் குலைத்து விடும்.

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடக்க முடியாமல் போனதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ரயில் மூலம் புனே சென்று ஆட்டத்தைக் கண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்படிப்பட்ட ரசிகர்கள் கால்பந்துப் போட்டிகளுக்கு இல்லையே என கேப்டன் சுனில் சேத்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கோரிக்கை, தயவு செய்து மைதானத்துக்கு வாருங்கள். எங்களின் கால்பந்து ஆட்டத்தை நேரில் காணுங்கள். கால்பந்துப் போட்டியைப் பற்றி பேசுங்கள். அதன்பின் வீட்டுக் செல்லுங்கள். விவாதம் நடத்துங்கள்.

ஆனால், நீங்கள் வரும்போது இருந்த மனநிலை போகும்போது இருக்காது என்று உறுதியளிக்கிறேன். சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் எங்களுக்கு உங்களின் ஆதரவு மிகவும் முக்கியம்.இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் அவசியம்.

என்னுடைய இந்த வீடியோ கால்பந்துப் போட்டிகளை பார்க்காதவர்களுக்காகத்தான். இந்திய கால்பந்து அணி மீதான நம்பிக்கையை இழந்தவர்களுக்கும், இந்திய அணி மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஆனது. அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், தயவு செய்து மைதானத்துக்கு வந்து கால்பந்து போட்டியைப் பாருங்கள்.

நீங்கள் கால்பந்தைப் போட்டியை நேரில் வந்து பாருங்கள், எங்களைக் களத்தில் விமர்சனம் செய்யுங்கள், திட்டுங்கள், சத்தமிடுங்கள், அதை வரவேற்கிறோம். ஆனால், தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக் கொண்டு, இன்டர்நெட்டில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள்.

எங்கள் முகத்தை நேருக்கு நேர் பாருங்கள். யாருக்குத் தெரியும் என்றாவது ஒருநாள் மாறும், நீங்கள் மாறுவீர்கள், கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும் நீங்கள் கால்பந்துக்காகவும் கோஷமிடுவீர்கள், தீவிரமான ரசிகர்களாக மாறுவீர்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். தயவு செய்து கால்பந்து போட்டிக்கு ஆதரவு தாருங்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு சுனில் சேத்ரி உருக்கமாக அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து