முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்துக்கும் ஆதரவு தாருங்கள் ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்து விட்டேன்.

இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று. அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து