முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்: 4-வது சுற்றில் ஷரபோவா முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா, 25-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கோன்டவிட்டை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்ல் 22 வயதான அனட் கோன்டவிட் 7-6 (8-6), 7-6 (7-4) என்ற நேர் செட்டில் கடுமையாக போராடி விட்டோவாவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபனில் அனட் கோன்டவிட் 4-வது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன் முறையாகும்.

மற்ற ஆட்டங்களில் 28-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும், 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-0, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரையும், வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து