முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வராக்கடன் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் மற்றும் கடன் மோசடிகளால் வங்கித்துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி அரசு வங்கிகளில் ரூ.7.77 லட்சம் கோடி அளவுக்கு வராக்கடன்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளை கையாளுவதில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்துகிறது.வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த குழுவினர் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து நேற்று விசாரணை நடத்தினர். இதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து