முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை மகளிர் டி-20 பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கோலாலம்பூர் : ஆசிய கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

4வது போட்டி...

ஆசிய கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நேற்று நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 4வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

எளிதான இலக்கு...

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட டி-20களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சனா மிர் 21 ரன்களும், ஜவேரியா கான் 18 ரன்களும் அடித்தனர். வங்கதேச தரப்பில் சல்மா மற்றும் நஹிடா ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 96 ரன்கள் எனும் எளிதான இலக்கை நோக்கி இரண்டாவதாக களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. வங்கதேச அணியில் சமினா சுல்தானா மற்றும் நிகர் சுல்தானா ஆகியோர் தலா 31 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். '

தலா ஒரு வெற்றி...

23 ரன்கள் மற்றும் 1 விக்கெட் வீழ்த்திய வங்காளதேச அணியின் ஃபகிமா காஹ்டும் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கோப்பையில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே தாங்கள் விளையாடிய 2 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து