முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: ஜூலை 7-ல் ஆஜராக சசிதரூருக்கு டெல்லி கோர்ட் சம்மன்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் சசிதரூருக்கு ஜூலை 7-ல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது.

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மே 14-ம் தேதி இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சசி தரூர் மீது டெல்லி காவல்துறை 306 மற்றும் 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இருப்பினும் இது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட வழக்கு என்று சசிதரூர் பதிலளித்தார்.

அது போல, சசி தரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கான நீதிமன்றத்துக்கு டெல்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதன் விசாரணை மே 28-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜுலை 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து