காலா படத்திற்கு எதிரான மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      சினிமா
Kala movie gallery

சென்னை: காலா படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் தொடர்ந்த மனுவினை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு அநேகமாக இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படம் தமிழகத்தின் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குச் சென்று, அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த திரவியம் நாடார் என்பவரது வாழ்வினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும், மறைந்த திரவியம் நாடாரின் மகன் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலமாக, ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை காலா படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்துடன் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற நோட்டீசின் பிரதி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் ஜவகர் தரப்பிலிருந்து காலா திரைப்பட வெளியீட்டுக்குத் தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலா படத்திற்கு எதிராக ஜவகர் என்பவர் தொடர்ந்த மனுவினை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு அநேகமாக இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து