முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி !

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கென்யா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில், இரண்டு கோல் அடித்த இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி, அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் அதிக சர்வதேச கோல்கள் சாதனையை நெருங்கியுள்ளார். மேலும் சர்வசேத கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

100-வது சர்வதேச போட்டி

மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

இந்திய அணி வெற்றி

இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். இந்த போட்டியில் அடித்த இரண்டு கோல்கள் உட்பட சுனில் செத்ரி இதுவரை சர்வதேச போட்டிகளில் 61 கோல்கள் அடித்துள்ளார்.  இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த தற்போதைய வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை (59 கோல்கள்) பின்னுக்கு தள்ளி சுனில் சேத்ரி (61 கோல்கள்) மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் போர்ட்டுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (81 கோல்கள்), அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (64 கோல்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

விரைவில் 2-வது இடம்

செத்ரி இன்னும் நான்கு கோல்கள் அடித்தால் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிப்பார். இந்திய அணி 7-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் 10-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதனால் மெஸ்சியை, சுனில் செத்ரி விரைவில் பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து