முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்கு மரீன் சிலிச் முன்னேற்றம் - ரபேல் நடால் - ஷிமோனா ஹெலபும் தகுதி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் ரபேல் நடால் - ஷிமோனா ஹெலபும் தகுதி பெற்றுள்ளனர்.

கடும் போராட்டம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார். இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

டெல்போட்ரோவை...

இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3. 3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

நடால் - ஹெலப்...

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷ்யா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து