முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றில் பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்த மக்கள் கேரளாவில் போக்குவரத்து பாதிப்பு

புதன்கிழமை, 6 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே காற்றில் பறந்த வந்த 500 ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் பேப்பர் துண்டுகள் பறந்து வந்து சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்த போது அவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ரூ. 500 நோட்டுகள்
அந்த பேப்பர் துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.  இதைப் பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்கத் தொடங்கினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி விட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்து சேகரித்தனர்.

கள்ள நோட்டுகளா?
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ரூபாய் நோட்டுக் களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி போலீசார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை நல்ல நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை
போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுக்களை எடுத்தவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்று விட்டனர். வாகனத்தில் யாராவது ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற போது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாலையில் ரூபாய் நோட் டுக்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து