முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

கோலாலம்பூர் : மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, இலங்கை அணியை 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

3-வது போட்டியில்....

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்காளதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

107 ரன்கள் மட்டுமே ...

இந்நிலையில், இந்திய அணி தனது 4-வது லீக் போட்டியில் இலங்கை அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யசோதா மெண்டிஸ், நிபுனி ஹன்சிகா ஆகியோர் களமிறங்கினர். நிபுனி 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் யசோதா உடன், ஹாசினி பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். யசோதா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹாசினி 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி பந்துவீச்சில் எக்தா பிஷிட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இன்று கடைசி லீக்...

இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். மிதாலி ராஜ் 23 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதைத்தொடர்ந்து அனுஜா பட்டேல் களமிறங்கினார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து