முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து தொடர்: கோலிக்கு மெக்ராத் அறிவுரை

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி-20 போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-டி-20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் சாதிக்க, அங்குள்ள தன்மைக்கு ஏற்ப கோலி விரைவாக மாறுவது மிகவும் அவசியம் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது., கோலி இப்போது மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து நிலைமைகள் மிகவும் கடினமானவை. ஆண்டர்சன் போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருக்கும் போது, அது எதிரணிக்கு கடினமான வேலை இருக்கும். நீங்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். கோலி ஒரு தரம் வாய்ந்த வீரர், எனவே ஒரு நல்ல போட்டியை காண காத்திருக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து