3-வது சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல தயாராகும் விஜேந்தர் சிங் - பிரிட்டன் வீரர் லீ மார்கமை எதிர்கொள்கிறார்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      விளையாட்டு
Vijender Singh 2018 6 7

புதுடெல்லி : இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காமன்வெல்த் சூப்பர் மிடில்வெய்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் பிரிட்டன் வீரர் லீ மார்கமை எதிர்கொள்ள இருக்கிறார்.

11-வது போட்டி

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், இதுவரை விளையாடியுள்ள 10 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக்  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார்.  இந்நிலையில், அவர் தனது 11-வது போட்டியில் பிரிட்டனை சேர்ந்த லீ மார்கம் உடன் மோத இருக்கிறார். இந்த போட்டி காலியாக இருக்கும் காமன்வெல்த் சூப்பர் மிடில்வெய்ட் சாம்பியன்ஷிப்பிற்காக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் விஜேந்தர் சிங் மூன்றாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.

தீவிர பயிற்சியில்...

விஜேந்தர் சிங்கை எதிர்த்து விளையாட இருக்கும் லீ மார்கம், இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த போட்டி ஜூலை 13-ம் தேதி லண்டனில் உள்ள யார்க் அரங்கத்தில் நடைபெறும் என விஜேந்தர் சிங் அறிவித்துள்ளார். அந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மார்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததற்கு பின் எந்த குத்துச்சண்டை போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதே சமயம் விஜேந்தர் சிங் ஆறு மாதங்களாக இரட்டை சாம்பியன்ஷிப் பட்டங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து