3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018      விளையாட்டு
Afghanistans Win 2018 06 08

மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

ரஷித் சுழலில்...
முதல் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ரஷித் கானின் சுழல் தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இரண்டு போட்டிகளிலுமே ஆட்டநாயகன் விருதை ரஷித் கான் வென்றார்

ரஷித் கான் அபாரம்
மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. . டி-20 முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். 146 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்கதேச அணியில் முஸ்பிகூர் ரஹீமும், மஹ்மதுல்லாவும் மட்டுமே பொறுப்புடன் ஆடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ரஷித் கான் வீசினார். வெற்றியை நோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்த வங்க தேச பேட்ஸ்மேன் ரஹீமை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாக்கினார் ரஷித் கான்.


ஆட்ட நாயகன் விருது
ரஷித் கானின் கடைசி ஓவரை வங்க தேச வீரர்களால் அடித்து ஆடமுடியவில்லை. சிங்கிள்கள் மட்டுமே எடுத்தனர். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட, 2 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. டிரா செய்துவிடுவதற்காக மூன்றாவது ரன் ஓடிய மஹ்மதுல்லா ரன் அவுட்டானார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கபட்டது.

இந்த வெற்றி மூலம் ஆப்கான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து