மே.இ.தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் : 185 ரன்னில் சுருண்டது இலங்கை அணி!

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      விளையாட்டு
WI vs SL 2018 6 9

போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பேட்டிங் தேர்வு

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. இளம் வீரர் ஷேன் டோவ்ரிச் 45 ரன்களுடனும் பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

2-ம் நாள் ஆட்டம்

இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது டோவ்ரிச் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.  அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக இழந்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம்

மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸில் துல்லியமான பந்துவீச்சால், இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. கேப்டன் சந்திமால் மட்டும் அதிகப்பட்சமாக 44 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் கேப்ரியல், ரோச் தலா 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர், பிஷூ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

360 ரன்கள் முன்னிலை

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்துள்ளது. கேரன் பாவெல் 64 ரன்களுடனும் டோவ்ரிச் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் 360 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து