முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி கோகலே சாலையில் நடைபெற்ற "ஹேப்பி ஸ்டிரீட்" நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, - மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆறாவது முறையாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி கோகலே சாலையில் ஆணையாளர்  அனீஷ் சேகர், தலைமையில் காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால்,   முன்னிலையில்   மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
மதுரை மாநகராட்சி தல்லாகுளம் கோகலே சாலையில்  காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்கேட்டிங், ஓவியம், சைக்கிளிங், ஜம்பிங் பால், ஸ்கிப்பிங், பேஸ்கட்பால், புட்பால், ஷெட்டில், ரோப் புல்லிங், கேரம்போர்டு, வாலிபால், ஸ்கூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களும் டான்ஸ், பிட்நெஸ் டான்ஸ், யோகா, சிலம்பாட்டம், லைவ்பேண்டு, கேம்ஸ்ஷோ உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு, ஆவின் உள்ளிட்ட தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ஆணையாளர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது
 மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆறாவது முறையாக இந்த ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக மாநகராட்சியின் ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் சாலைகள் வாகனங்கள் செல்வதற்காக மட்டுமே என்பதை மாற்றும்விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டிலும், செல்போனும் மூழ்கி இருப்பதை தவிர்த்து அனைவருடனும் சந்தோஷமாக அவரவர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சுதந்திரமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பயன்படுத்தும் வகையிலும், தங்கள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், திடக்கழிவுகளை அகற்றும் முறைகள், டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறைகள், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சியை தூய்மையான சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார். முன்னதாக காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால்,  பணிமாறுதல் பெற்று செல்வதை முன்னிட்டு ஆணையாளர்  நினைவுபரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்  பழனிச்சாமி, செயற்பொறியாளர்  .ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள்  அலெக்;ஸ்சாண்டர்,         செந்தில் (தெருவிளக்கு) சுகாதார அலுவலர்  .சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர்கள்  முருகன்,  .ராஜசீலி, சுகாதார ஆய்வாளர்  .இளையராஜா,  எலிகண்ட் ஈவன்ஸ் நிறுவனத்தை சார்ந்த  .ஜீவன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர்கள்,  பங்களிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், பொது மக்கள், காவல்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து