முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போத்து நடவு முறையில் மரங்கள் நடும் களப்பணி முகாம்: பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் அரசு சாரா இயக்கங்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழு(தென்மண்டலம்) சார்பில் போத்து நடவு முறையில் மரங்களை நடவு செய்திடும் களப்பணி முகாமில் பள்ளி மாணவ,மாணவியர் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்து சென்றனர்.
அரசு சாரா இயக்கங்களின் பொதுக்குழு(தென்மண்டலம்) சார்பாக சித்தர் கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு மற்றும் அன்னவயல் அறக்கட்டளை சார்பில் திருமங்கலம் ஒன்றியம் தங்களாச்சேரி கிராமத்திலுள்ள சடையாண்டி கோவில் குளக்கரையில் போத்து நடவு முறையின் மூலம் மரங்களை நடவு செய்திடும் களப்பணி முகாம் வெகு சிறப்புடன் நடைபெற்றது.தங்களாச்சேரி அரசுப் பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த களப்பணியின் போது இயற்கையான முறையில் போத்து நடவு மூலமாக மரங்களை நடவு செய்வது குறித்து அன்னவயல் அறக்கட்டளையின் நிர்வாகி சமூக ஆர்வலர்.காளிமுத்து நேரடி செயல் விளக்கங்களுடன் பயிற்சி யளித்தார்.முகாமின் நிறைவில் களப்பணியில் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.மேலும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாணவ,மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த சமூக ஆர்வலர்கள் சித்தர்கூடம் சோம்நாத்,அன்னவயல் காளிமுத்து,தங்களாச்சேரி மதன்,ஜஸ்வந்த் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து