முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியில் மரக் கன்று நடும் விழா.

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      தேனி
Image Unavailable

கம்பம், -  நாலந்தா இன்னோவேஷசன் பள்ளியில் உலக சுற்றுப் புறச் சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா பள்ளி தாளாளர் முனைவர் டாக்டர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.தேனி மாவட்டம் கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது மட்டுமில்லமால் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம், போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து பள்ளி தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் கூறும் போது மதிப்பெண்கள் மடடுமே நோக்கமில்லமால் மாணக்கர்களின் சுய சிந்தனையை து£ண்டும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதே போன்று உலக சுற்றுப் புறச் சூழல் தினத்தை  முன்னிட்டு பள்ளி வளாகத்தில்  வேம்பு,முருங்கை,பப்பாளி போன்ற எராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.மேலும் மரங்களின் அவசியம் குறித்தும் மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சூற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது என்றார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மோகன் (பொறுப்பு)பள்ளி தலைமை ஓருங்கிணைப்பாளர் மலர்விழி, பள்ளி மேலாளர் விக்னேஷ் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் விக்னேஷ் வெகு சிறப்பாக செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து