சிங்கப்பூர் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
Trump-Singapore-P M 2018 06 12

வாஷிங்டன், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் செய்தியாளார்களிடம் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ட்ரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் உச்சி மாநாட்டிற்காக 110 கோடியை செலவிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் செலவு முழுவதையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து