அரசியலுக்காக இந்தியா துன்புறுத்துவதாக புகார்: இங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நீரவ் மோடி

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
Nirav Modi 16 02 2018

லண்டன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் கோரி அணுகியுள்ளார். இந்திய அரசு தன்னை அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நீரவ் மோடியின் சொத்துக்களை சி.பி.ஐ. முடக்கி உள்ளது. அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நிரவ் மோடி ஜனவரி மாதமே இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்று விட்டனர். லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. அவர் அமெரிக்காவில் தங்கி இருக்கக் கூடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் லண்டனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த சூழலில், நீரவ் மோடி இங்கிலாந்திடம் அடைக்கலம் அளிக்குமாறு கோரியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக தான் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இது பற்றிய தகவல்கள் எதையும் அந்நாநட்டு உள்துறை அலுவலம் எதையும் வெளியிடவில்லை. தனிநபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என கூறி விட்டதாகவும் தெரிகிறது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து