முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வில் தகவல்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : தனிமையில் வாழ்பவர்களின் வாழ்வு திண்டாட்டமானால் அவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்.என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக் கழக ஆஸ்பத்திரியில் சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி வின்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது ஏன்? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள், தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மன அழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல் நலனும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து