போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது - டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      இந்தியா
delhi-hc 2017 10 9

புது டெல்லி : போராட்டம் நடத்துவதென்பது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதையோ, குப்பைகளை சாலைகளில் கொட்டுவதையோ அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.

புது டெல்லி முனிசிபல் கவுன்சிலின் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த மாதம் 24-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அமைச்சரவை அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன், இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவன் ஆகியவற்றின் முன்பாக சாலைகளில் அவர்கள் குப்பைகளை கொட்டியதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி எஸ்.பி.கர்க் ஆகியோர் அடங்கிய அமர்வு  கூறியதாவது: போராட்டத்தின்போது சாலைகளில் குப்பைகளை கொட்டுவதென்பது, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல; பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயலுமாகும். போராட்டங்கள் என்பது குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டபோதிலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபடுவது, சாலைகளில் குப்பைகளை கொட்டுவது என்பது போன்ற வழிமுறைகளை அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களின் பட்டியலை ஜூலை 16-ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க புது டெல்லி முனிசிபல் கவுன்சில் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் கோர்ட் உத்தரவிட்டது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து