மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக சரத்குமார் நியமனம்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      இந்தியா
sarathkumar 2018 6 11

புது டெல்லி : மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத் குமார் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.

4 ஆண்டுகள் வரையில் சரத் குமார் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அரியானாவை சேர்ந்தவர் ஆவார். கடந்த ஆண்டு செப்டம்பரில் என்.ஐ.ஏ. தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தற்காலிக தலைவராக அந்த ஆணையத்தின் உறுப்பினர் அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு பிரிவு இந்திய அஞ்சல் சேவை பிரிவு அதிகாரியான சக்சேனா, வரும் 20-ம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்கிறார். அந்த ஆணையத்தின் தலைவர் வினய் மிட்டலின் பதவிக் காலம் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,

இதுதொடர்பாக அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அல்லது 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அதாவது பதவிக் காலம் முழுமையடையும் வரை அரவிந்த் சக்சேனா இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ரா -விலும் அரவிந்த் சக்சேனா அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து