முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2லட்சம் மாத்திரைகள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த தயார்நிலையில் இருந்த ரூ.2 லட்சம்மதிப்பிலான வலிநிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல்செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இடிந்தகல்புதூர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு படகில் கள்ளத்தனமாக இலங்கைக்கு மர்ம பொருள் கடத்த உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் நள்ளிரவில் அங்கு சென்று மறைந்து நின்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த படகினை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட போலீசார் சென்றபோது அதில் இருந்த 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோதுஅ ந்த படகில் ஏராளமான பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்த பெட்டிகளை பிரித்து சோதனையிட்டு பார்த்தபோது மாத்திரைகளாக இருந்தது. அந்த மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது அதில் வலிநிவாரண மாத்திரைகள் தவிர, ஆண்மை குறைவினை போக்கும் வீரிய மாத்திரைகள் என்பது தெரிந்தது.
    இதனை தொடர்ந்து போலீசார் அதனை எண்ணி பார்த்தபோது 149 பெட்டிகள் இருந்ததும் அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்பதும் விசாரணையில்தெரிந்தது. இதன்பின்னர் போலீசார் அந்த படகினையும், மாத்திரை பெட்டிகளையும் பறிமுதல் செய்து கீழக்கரை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார். இந்த விசாரணையில் படகின் உரிமையாளர் இடிந்தகல்புதூர் செல்லம் மகன் இருளாண்டி என்பவரையும், உடன் இருந்த கீழக்கரை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த ஒருவரையும் போலீசார்தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து