சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள்: மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்ரி !

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      விளையாட்டு
messi 2018 6 11

மும்பை :  இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி.

இந்தியா - கென்யா

கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.


2 கோல்கள்...

இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது.  கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார். இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து