பார்முலா 1 கார்பந்தயம்: 50-வது வெற்றியை பதிவு செய்தார் செபஸ்டியான்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      விளையாட்டு
Sebastian Vettel 2018 6 11

ஒட்டவா : பார்முலா 1 கார்பந்தயத்தில் நேற்றைய கனடா கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

121 புள்ளிகள்

பார்முலா 1 கார்பந்தயத்தின் 2018 சீசன் நடைபெற்ற வருகிறது. இதன் 7 கிராண்ட் பிரிக்ஸ் கனடாவில் நடைபெற்றது. கனடா கிராண்ட் பிரிக்ஸிற்கான போல் நிலையை அடைந்த பெர்ராரி அணியின் செபஸ்டியான் வெட்டல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பார்முலா ஒன் பந்தயத்தில் 50-வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் முடிவில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மெர்சிடெஸ் வீரர் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

சாம்பியன் பட்டம்

கனடா கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் வி. பொட்டாஸ் 2-வது இடத்தையும், ரெட் புல் வீரர் எம் வெர்ஸ்டாப்பென் 3-வது இடத்தையும் பிடித்தனர். லெவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்தையே பிடித்தார். செபஸ்டியான் வெட்டல் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து