முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் சாப்பிட்ட மதிய உணவு மெனு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர்  டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் நேற்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதனிடையே, இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு டிரம்ப் - கிம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.

மதிய உணவு மெனுவில், பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். இது தவிர  கொரிய நாட்டின் புகழ்பெற்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது.

பீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய யாங்சூ ப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், காய்கறிகள். சாப்பாட்டுக்கு பிந்தைய மெனுவில், டார்க் சாக்லேட் டார்ட்லெட் கனாசே,  வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் மற்றும் டிராபிஜின்னே. இவைதான் அந்த ராயல் சாப்பாடு லிஸ்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து