அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மனமிருக்கிறது! ஆனால் பணம்தான் இல்லை! அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தமிழகம்
jayakumar(N)

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற மனம் உள்ளது ஆனால், பணம்தான் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை கே.வி.கே.குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான 60-க்கும் மேற்பட்ட குடிசைகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனம் உள்ளது. ஆனால், பணம்தான் இல்லை என்று கூறினார்.


பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், தாமரை இல்லாமல் இலை இல்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், தாமரைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. தாமரை இல்லாமல் இலை இல்லை. இலை தள்ளாடி கொண்டிருப்பதாக கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார். மேலும் தமிழக மக்களின் மனதில் தாமரைக்கோ, சூரியனுக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ இடமில்லை என்றும் மக்கள் மனதில் எப்போதும் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து