முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்கள் கட் அடிப்பது போல் ஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கட் அடிப்பது போல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டம் கொண்டு வந்தாலும் வரக்கூடாது என்கின்றனர். சென்னை-சேலம் எட்டு வழியை சாலையைக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறேன் என தமிழக முதல்வர் கூறியிருப்பதற்கு பாராட்டுகள். திட்டத்திற்கு எதிராக வதந்தியைக் கிளப்புவதற்கு நிறைய பேர் இருக்கின்றனர். வதந்திகளின் அடிப்படையில் அரசாங்கம் செயல்பட்டால் அது மக்கள் நலன் சார்ந்த அரசாங்கமாக இருக்க முடியாது.

பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் ‘கட்’ அடிப்பது போல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு ‘கட்’ அடிக்கிறார். சட்டப்பேரவைக்கு சென்றாலும் அவரால் எந்த பிரயோஜனமும் கிடையாது” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து