முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 ஆண்டு பகை முடிவுக்கு வந்தது: வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: வடகொரியாவும், அமெரிக்காவும் ஜென்ம எதிரிகளாக கருதப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவர்கள் கிம் - டிரம்ப் இருவரும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேசினர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பதிவு செய்ய உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் திரண்டனர். உலகின் பல நாடுகளிலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பானது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர்  டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், டிரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 12-ல் சிங்கப்பூரில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ஏர் சீனா விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்தார். பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை அதிபர் கிம் சந்தித்துப் பேசினார். இது போல, சிங்கப்பூருக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் தங்கினார்.

இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பும், அதிபர் கிம்மும் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று சந்தித்தனர். அதன்படி, நேற்று காலை இரு தலைவர்களும் முதலில் தனியாக நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கினர். வசைபாடியவர்கள் நேரில் சந்தித்து கொண்டதால் இருவரிடையே சிறிது நேரம் தர்மசங்கடம் நிலவியது. அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் கைகுலுக்கி கொண்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் காமிரா இந்த காட்சியை படம் பிடித்தது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது.. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்களும்கையெழுத்திட்டனர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

வடகொரியா- அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கொண்டதை உலகமே உற்று நோக்கியது. பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இணையதள செய்தி நிறுவனங்கள், அதிக முக்கியத்துவத்துடன் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வெளியிட்டன. கிம்- டிரம்ப் சந்திப்பை வடகொரியா மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு வடகொரிய அதிபரின் செயல்பாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. டிரம்ப், கிம் தங்கியுள்ள ஓட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஓட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக ரூ.135 கோடி செலவிடப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து