முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு புதிய நவீன மிஷின் ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேடு, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு வங்கித் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கி  கவர்னர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு நேற்று ஆஜரானார்.

அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வங்கிகளின் வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும். நீரவ் மோடியின் மோசடி போன்ற சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்றும் நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு அவர் தெரிவித்தார்.

மேலும் கிடைத்த தகவல்களின் படி, நாடாளுமன்ற நிலைக் குழு அவரிடம் பணமதிப்பிழப்பு செய்த பிறகு திரும்ப வந்த பழைய நோட்டுகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அதற்கு உர்ஜித் படேல் பதிலளிக்கையில், பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கருவிகளை வரவழைத்துள்ளது. ஏற்கனவே உள்ள கருவிகள் மற்றும் மனித வளம் பழைய நோட்டுகளை எண்ணுவதற்கு போதுமானதாக இல்லை. புதிய கருவி நோட்டுகளின் மதிப்பை வினாடிகளில் கணக்கிடும் அதுமட்டுமின்றி கள்ள நோட்டுகளையும் அது கண்டுபிடிக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து