பெடரரின் சாதனையை சிந்திக்கவில்லை - பிரெஞ்சு ஓபன் சாம்பியன் நடால்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      விளையாட்டு
Federer-Nadal 2018 6 12

பாரிஸ் : 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ள பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை என நடால் கூறியுள்ளார்.

11-வது முறையாக...

உலகின் நம்பர்-1 வீரரான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறையாக கைப்பற்றி சாதித்தார். ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பெற்றுள் £ர். ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் முதல் இடத்தில் உள்ளார். அவ ருக்கு அடுத்தப்படியாக நடால் உள்ளார். பெடரரின் சாதனையை நடால் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிந்திக்க வில்லை...

இது தொடர்பாக அவர் கூறிய தாவது, ‘பெடரரின் சாதனையை நெருங்குவது பற்றி அதிகமாக சிந்திக்க வில்லை. என்னை பொறுத்த வரை டென்னிஸ் மிகவும் முக்கியமானது தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. எனது உடல் தகுதி இருக்கும் வரை ஆடுவேன்’ என்றார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து