முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடாலை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் முதல் இடத்திற்கு குறிவைக்கும் ரோஜர் பெடரர் !

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டென்னிஸ் தரவரிசையில் நடாலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க ரோஜர் பெடரர் திட்டமிட்டுள்ளார்.

முதல் இடத்தில்...

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 20 முறை கைப்பற்றி உலக சாதனைப் படைத்திருக்கும் ரோஜர் பெடரர் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 11-வது முறையாயாக சாம்பியன் பட்டம் வென்ற நடால் முதல் இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தை...

பெடரர் மியாமில் நடைபெற்ற போட்டியில் மார்ச் 24-ந்தேதி விளையாடினார். அதன்பின் நடைபெற்ற செம்மண் போட்டிகளை தவிர்த்து புல்தரை போட்டிக்கு தயராகி வருகிறார். விரைவில் ஸ்டட்கார்ட் ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் முதல் இடத்தை பிடித்துவிடலாம். இதனால் எப்படியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் 36 வயதான பெடரர் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து