முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகமது ஷமி உடலளவிலும், மனதளவிலும் பிட் ஆக வேண்டும்: பி.சி.சி.ஐ. விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மனதளவிலும், உடலளவிலும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது.

யோ-யோ டெஸ்ட்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் போட்டியில் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். கடந்த சில மாதங்களாக அவர் குடும்ப பிரச்சினையில் சிக்கி தவித்தார். என்றாலும் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் விளையாடினார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

நவ்தீப் சைனி தேர்வு

முகமது ஷமி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற டெஸ்டில் தோல்வியடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் நவ்தீப் சைனி இடம்பிடித்துள்ளார். இந்தியா ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து முக்கியமான கருதப்படும் இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். இதில் முகமது ஷமியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். இதனால் முகமது ஷமி உடலளவிலும், மனதளவிலும் ஃபிட் ஆக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது.

சந்தேகமும் இல்லை

இதுகுறித்து அணி நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில் ‘‘முகமது ஷமியின் கிரிக்கெட் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மனதளவிலும், உடலளவிலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அணி விரும்புகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் கிரிக்கெட்டில் இன்னும் ஆர்வமாக ஈடுபட வேண்டியது தேவை. ஒருமுறை பிட்னஸ் லெவலை அவர் அடைந்து விட்டால், அணிக்கு திரும்பிவிட முடியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து