முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்கிறது: கலெக்டர் வீரராகவ ராவ்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை- மதுரை மாவட்டம், மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
  மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.  இக்குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மேலும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்து உரிய விழிப்புணர்வு மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொழிலாளர் நலத்துறையின் சார்பில் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்தும் பணி திறம்பட செயல்படுத்தப்பட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்கிறது என தெரிவித்தார்.
  குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஓவியம், விழிப்புணர்வு வாசகம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.  இப்போட்டிகளில் கட்டுரைப்போட்டியில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காவியா என்பவருக்கு முதல்பரிசும், கேப்ரன்ஹால் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.பிரியதர்ஷினிக்கு இரண்டாம் பரிசும், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஹரிஹரனுக்கு மூன்றாம் பரிசும், பேச்சுப் போட்டியில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கார்த்தியாயினி முதல் பரிசும், நேரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜீவா இரண்டாம் பரிசும், ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி மாணவி தி.தி.அனிதா ஸ்ரீ மூன்றாம் பரிசும், ஓவியப்போட்டியில் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.கார்த்திகேயன் முதல் பரிசும், ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.சிவதாரிணி இரண்டாம் பரிசும், ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி மாணவன் வி.முனீஸ்வரன் மூன்றாம் பரிசும் பெற்றதையொட்டி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.  பின்னர் மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின சிறப்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
  இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்  .காளிதாஸ் அவர்கள், எம்.சி.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து