முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தைத் முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் துறையின் சார்பாக,  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில்,  குழந்தை தொழிலாளர் முறை  எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையினை முழுவதுமாக அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானாது அரண்மனை சாலையில் துவங்கி, சாலைத் தெரு வழியாக ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.  இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பது குழந்தைகளின் உரிமை, குழந்தையின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
 இப்பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் ஆணையர் ஜி.விஸ்வநாதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குநர்; கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.  இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து