முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதநகர், -குழந்தைகள் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு தேவையான சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கி தரக்கூடிய பொறுப்பு  பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்திற்கு உள்ளது - மாவட்ட ஆட்சியர் பேச்சு
 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  தலைமையில் இன்று(12.06.18) நடைபெற்;றது. இந்நிகழ்;ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், தொழிலாளர் நலத்துறை மற்றும் வேல்டு விசன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த iயெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்கள். அதை தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கட்டுரை  மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பாரட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளியில் பயிலும் 14 மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் மூலமாக தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்கள். 
அதை தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம்  மற்றும் வேல்டு விஷன் மூலமாக குழந்தை தொழிலாளர் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினையும், விழிப்புணர்வு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வெளியிட்டார்கள்.
   விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகர் தி ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்  இணைந்து நடத்திய குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.  மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் “கலப்படத்தை கண்டறிய விரைவான சோதனை முறைகள்” என்ற கையேட்டினை ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிலாளர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினார்கள். 
அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தையும், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தும், விழிப்புணர்வு விளம்பர வில்லைகளை ஆட்டோவில் ஒட்டியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதன்பின் காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர்; அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்  ஆனந்தகுமார்,   உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து