முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85 வரை அதிகரித்தது. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இருவாரமாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

14 நாட்களாக (ஜூன் 12) தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் நேற்று (ஜூன் 13) எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து