முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பட்டறைகளில் வெங்காயங்களை பதுக்கி வைத்தனர்.  தற்போது ரம்ஜான் பண்டிகை வர உள்ளதையொட்டி பிரியாணி மற்றும் தயிர் பச்சடி தயாரிக்க வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக கேரள மாநிலத்திற்கு அதிக அளவு வெங்காயங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் வரத்தும் குறைந்துள்ளளது. 60 டன் வரவேண்டிய இடத்தில் 40 டன் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ ரூ.42 வரை விலைபோனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தாங்கள் பட்டறையில் வைத்திருந்த வெங்காயங்களையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். வெங்காய விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து