வீடு கட்ட சலுகை வரம்பு உயர்வு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      வர்த்தகம்
house

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகரப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு நடுத்தர வருவாய் பிரிவில் முதல் நிலையினருக்கான பரப்பளவு வரம்பு 120 சதுர மீட்டரிலிருந்து 160 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் 2ம் நிலையினருக்கான பரப்பளவு வரம்பு 150 சதுர மீட்டரிலிருந்து 200 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் தேதியிலிருந்தே கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தில் மேலும் பலர் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து