மணப்பாறை - திண்டிவனம் தொழில் பூங்காக்களின் அடிப்படை வசதிகளுக்காக ரூ.148.50 கோடியில் வசதிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
edapadi cm 2017 09 30

சென்னை, திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தொழில் பூங்காக்களுக்கு ரூ.148.50 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்கும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, சாதகமான தொழில் கொள்கைகளை வகுத்து, தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்)திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய்கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச்சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.


சிப்காட் நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் போன்ற வசதிகள், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து