ராமேசுவரத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில் புனித நீராடல்.

புதன்கிழமை, 13 ஜூன் 2018      ராமநாதபுரம்
rmstemple  13 6 18

  ராமேசுவரம்,ஜூன்,13:  அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்தம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் புனித நீராடி  ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
 ராமேசுவரத்தில்  வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையில் 10  ஆயிரத்துக்கும் மேலான   பக்தர்கள் ரயில்,அரசு பேருந்து,தனியார் வாகனம் மூலம் வந்து குவிந்தனர்.அதன் பின்னர்  அக்னிதீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனபூஜை,திதிபூஜை,தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர்.தொடர்ந்து ராமநாதசுவாமி  திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில்  புனித நீராடினர். அதன் பின்னர் திருக்கோயில் பிரகாரத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள்,சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணையில்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.        

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து