கொடைக்கானலில் அனைத்து மதத்தினர் பங்கு பெற்ற இப்தார் நோன்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      திண்டுக்கல்
kodaikanal ifthar nonbu  13  6 18

கொடைக்கானல் -  கொடைக்கானலில் அனைத்து மதத்தினர் பங்கு பெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது.
 கொடைக்கானல் டவுன் பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்குபெற்றனர். இந்த இப்தார் நிகழ்வில் கொடைக்கானலைச் சேர்ந்த அனைத்து கட்சியினரும் பங்கு பெற்றனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் டவுன் பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கொடைக்கானல் மறை வட்ட அதிபர் அருட்தந்தை எட்வின்சகாயராஜா, மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் அ.தி.முக. நகர செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் நகர் மன்றத்தலைவரும் தி.மு.க. நகரசெயலாளர் முகமது இப்ராகிம், ம.தி.முக. நகர செயலாளர் தாவுத், சன்பில்டர் ரவி, டாக்டர் இளம் வழுதி, தி.மு.க. மவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனிராஜா, நகர காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து