முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் உணவுகளின் விலையை அறிந்து கொள்ள செயலி அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ரயில் பயணத்தின் போது உணவுப் பொருட்கள் வாங்கும் போது விலை பட்டியலை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார்.

மெனு ஆன் ரயில் என்ற செயலியை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.

ரயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியது வருமோ என்று இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த மெனு ஆன் ரயில் செயலியை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதில், அனைத்து உணவு பொருட்களுக்கும், அதிகபட்ச எம்.ஆர்.பி. விலையுடன் பட்டியல் கிடைக்கும்.

இந்த செயலில், உணவு பொருட்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அவை குளிர்பானங்கள், காலை உணவு, முழு சாப்பாடு, இணை உணவுகள். இந்த செயலியின் மூலம், எக்ஸிகியூட்டிவ் சேர் கார், ஏசி சேர் கார் உள்ளிட்டவற்றில் பயணிக்கும் போது முன்கூட்டியே பதிவு செய்யும் உணவுகளின் விலைகளையும் இதன் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம். அதே போல, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களில் பயணிக்கும் போதும், ரயில் உணவை முன்பதிவு செய்யும் போதும் இந்த செயலி பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து