முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் நேற்று இந்திய பாதுகாப்புப் படை தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகினர்.

தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களும், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் கைபற்றப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் கண்டறிப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்திப்போராவில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை கடந்த சனிக்கிழமை பன்னார் பகுதியில் தொடங்கியதாகவும், அன்று முதல் ராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து