26 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தினருடன் மும்பை சமையல் கலைஞர் இப்தார் விருந்து

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
iftar 2018 06 14

புதுடெல்லி: 26 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தினருடன் மும்பை சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா இப்தார் விருந்து மேற்கொண்டார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர் விகாஸ் கண்ணா. சமையல் கலைஞரான இவர் மும்பையில் பல ஓட்டல்களில் பணிபுரிந்துள்ளார். இப்போது நியூயார்க் நகரில் வசிக்கிறார். இந்நிலையில், விகாஸ் கண்ணா டுவிட்டரில், 26 ஆண்டுகளுக்கு முன்பு எனது உயிரைக் காப்பாற்றிய முஸ்லிம் குடும்பத்தினரை கண்டுபிடித்து விட்டேன், அவர்களுடன் இணைந்து ரம்ஜான் நோன்பை முடிக்க உள்ளேன் என கடந்த 11-ம் தேதி பதிவிட்டிருந்தார். இதன்படி, அந்த முஸ்லிம் குடும்பத்தினரை சந்தித்த விகாஸ், அவர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்கோபார் பகுதியில் கலவரத்தில் பலர் காயமடைந்ததாக தகவல் கிடைத்தது. ஆனால், அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை பார்க்க ஓட்டலில் இருந்து தைரியமாக சென்றேன். அப்போது என்னை எச்சரித்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல், என்னை யார் என்று அவர்களிடம் கேட்டனர். அதற்கு அந்த குடும்பத்தினர் எங்களது மகன் என்று சொன்னதால் உயிர்த் தப்பினேன். பிறகு எனது சகோதரர் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, என்னைக் காப்பாற்றிய அந்த முஸ்லிம் குடும்பத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த ஆண்டு முதல் ரம்ஜான் மாதத்தில் ஒரு நாள் விரதம் இருந்து வருகிறேன் என்றார்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து