முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் சிறை

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

மாலத்தீவு : மாலத்தீவு முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூமுக்கு 19 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மமூன் அப்துல் கயூமின் ஆட்சி மாலத்தீவில் நடைபெற்றது. இவர், அந்நாட்டின் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் உறவினர் ஆவார். மமூன் அப்துல் கயூம் யமீன் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்காத காரணத்தால் அவருக்கு மாலத்தீவு நீதிமன்றம் ஒரு வருடம் 7 மாதம் 6 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து