முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 2வது பெரிய ரத்த வங்கி மதுரையில் தான் உள்ளது கலெக்டர் வீரராகவராவ் பெருமிதம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

  மதுரை,- மதுரை மாவட்டம், அரசு இராசாசி மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
  அதிகளவு ரத்த தானம் வழங்குவதில் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நோயாளிகளைக் காப்பதிலும், தமிழகத்தின் 2வத பெரிய ரத்த வங்கியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை திகழ்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் யூனிட் ரத்தம் பெறப்படுகிறத.  அதன் மூலம் பல்வேறு பல்வேறு வகையிலும் 60 ஆயிரம் நோயாளிகள் பயன் பெறுகின்றனர்.
  ஒருவர் வழங்குகின்ற ரத்த தானத்தின் மூலமாக பலரின் உயிரைக்காப்பாற்ற முடியும்.  பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு இடங்களிலும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முகாம்கள் நடத்தி தேவையான ரத்தத்தைப் பெற்று நோயாளிகளுக்கு வழங்குவதில் அதிக முன்னுரிமை காட்டி வருகிறது.  ரத்த தானம் அளிப்பதை இளைய தலைமுறையினர் தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும்.  18 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்ட 45 கிலோ எடையுள்ள எவரும் தங்களது ரத்தத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் வழங்கலாம்.  பலமுறை நானும் எனது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளேன்.  பொதுமக்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் அனைவரும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
  முன்னதாக 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உலக ரத்த தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு தொடங்கிய இப்பேரணியானது அரசு இராசாசி மருத்துவமனையிலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது.
  இந்நிகழ்ச்சியில் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டியன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அர்ஜீன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து