முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார் வடகொரிய அதிபர்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம் திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா நடத்தி வந்த அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக பதட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்குக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில்  நடைபெற்றது. அமெரிக்காவுக்கு வட கொரியாவால் இனி அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று அதிபர் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதையடுத்து ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அமெரிக்‍க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்து கிம் ஜோங், ரஷ்ய அதிபர் புடினிடம் விவாதிக்‍க இருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்‍கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து